பேபிகார்ன் பலருக்கும் பிடிக்கும். பேபிகார்ன் என்பது மக்காச் சோளத்தில் சிறிதளவில் இருக்கும். இனிப்பாக இருக்கும். பேபிகார்ன் கொண்டு பல ரெசிபிகள் செய்யலாம். நாம் இங்கு உருளைக்கிழங்கு ஃப்ரை போல் பேபிகார்ன் ஃப்ரை செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பேபிகார்ன் - 1/4 கிலோ,
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 டீஸ்பூன்,
வெங்காயம், தக்காளி - தலா 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவையான அளவு
தனியாத்தூள் - 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்,
செட்டிநாடு பவுடர் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றவும். அடுப்பில் அந்த தண்ணீர் ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும். தண்ணீர் கொதித்து வந்த உடன் கழுவிய எடுத்து வைத்துள்ள பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வேகவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் 'கட்' செய்து கொள்ளவும். இப்போது மற்றொரு ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து கலக்கவும். அடுத்து சிறிதளவு கடலை மாவு, அரிசி மாவு சேர்க்கவும். அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து எல்லாம் நன்றாக ஒருமுறை கலந்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்னை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பேபிகார்ன் ஃப்ரை ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/