பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சொன்னதுபோல கஸ்டர்ட் குலாப் ஜாமுன் எப்படி செய்வது என்று பார்க்கலாம். குலாப் ஜாமுன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதன் சுவையுடன் கஸ்டர்டின் மென்மையும் இனிமையும் சேரும்போது, அது இன்னும் பிரமாதமாக இருக்கும். சக்கரை சாதமும் வடகறியும் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது போல இந்த சுலபமான ரெசிபியைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் வீட்டில் கஸ்டர்ட் குலாப் ஜாமுனை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கஸ்டர்ட் பவுடர்
பால்
சர்க்கரை
பிரெட் குலாப் ஜாமுன்
செய்முறை:
சுமார் 2.5 டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை கால் கப் பாலில் கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்சி, அதில் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். குலாப் ஜாமுனில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால், சர்க்கரையை அளவாகச் சேர்க்கவும்.
கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் கலவையை பாலில் சேர்த்து, 7 நிமிடங்கள் குறைந்த தீயில் கிளறவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடவும். கெட்டியான கஸ்டர்ட்டை ஆறவிட்டு, 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
குளிர்ந்த கஸ்டர்ட்டை வெளியே எடுத்து, ஒரு கரண்டியால் அல்லது விஸ்க் கொண்டு நன்கு கலக்கவும். ஏற்கனவே செய்து வைத்துள்ள பிரெட் குலாப் ஜாமுனை ஒரு பாத்திரத்தில் லேயராக அடுக்கவும். அடுக்கிய குலாப் ஜாமுனின் மேல், தயாராக வைத்துள்ள கஸ்டர்ட் கலவையை பரப்பவும்.
இந்த கஸ்டர்ட் குலாப் ஜாமுனை குளிர்ச்சியாகப் பரிமாறவும். குளிர்ந்த நிலையில் இதன் சுவை அருமையாக இருக்கும்.