பாக்கியலஷ்மி சீரியல் ஸ்பெஷல் வதக்கி அரைத்த தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி செய்து அழுத்து விட்டதா/ அப்போ இந்த சட்னியை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள். வதக்கி அரைத்த தக்காளி சட்னியை மரியா ஜென்ஸி யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
காய்ந்த மிளகாய்
தக்காளி
உப்பு
பொட்டுக்கடலை
தேங்காய்
கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு போட்டு வதக்கவும். பின்னர் அதில் சிறிது பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்.
Vijaytv Bagyalakshmi serial special Thakkali chutney #shorts #vijaytv #tomatochutney #bagyalakshmi
நன்றாக வதக்கி இவை அனைத்தும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் எப்போதும் போல தாளிப்பு விட்டு எடுத்தால் அவ்வளவுதான் தோசை இட்லிக்கு சுவையான வதக்கி அரைத்த தக்காளி சட்னி ரெடி.