கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கத்தால் ஜூஸ், கூல்டிரிங்ஸ் என மக்கள் குடித்து வெயிலை தணித்து வருகின்றனர். ஆனால் அவற்றை தவிர்த்து விட வேண்டும் என டாக்டர் அருண் கார்த்திக் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Advertisment
வெயில் காலத்தில் இருக்கறதுலயே ரொம்ப சிறந்த உணவுன்னு பார்த்தோம்னா அது தண்ணீர் தான். வெயில் காலத்துல 3யில் இருந்து 5 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்கலாம்.
இருந்தாலும் நாம் எடுக்கும் உணவுகளில் சோடியம் சத்து, பொட்டாசியம் சத்து கிடைத்துவிடும். காய்கறி, கீரை, சமையல் உப்புகளில் கிடைத்துவிடும். ஆனால் செயற்கையான உணவுகள் எது பெஸ்ட் என்று பார்த்தால் ஓ.ஆர்.எஸ் பவுடர் தான்.
இந்த ஓ.ஆர். எஸ் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்தால் தேவையான சோடியம் சத்து பொட்டாசியம் சத்து, குளோரைடு சத்து கிடைத்துவிடும். இதை தவிர மற்ற எதுவுமே நல்லது கிடையாது.
Advertisment
Advertisements
அதேபோல இளநீர், மோர், ஓ.ஆர்.எஸ் பவுடர் மூன்றையும் எடுத்துக் கொள்ளலாம். பழ ஜூஸ்கள் மற்றும் கூல்ட்ரிக்ஸ்களை தவிர்த்து விட வேண்டியது அவசியம் என்று டாக்டர் கார்த்திகேய கூறுகிறார்.
வெயில் காலங்களில் எடுத்து கொள்ள வேண்டியவை:
தண்ணீர் - ஒருநாளைக்கு 3முதக் 5 லிட்டர்
மோர்
இளநீர்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.