வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வாழைப்பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவு உள்ளன. அப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தில் டேஸ்டியான வாழைப்பழ அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நேந்திரம் பழம் - 2
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய்
முந்திரி பருப்பு
உலர் திராட்சை
துருவிய தேங்காய் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
வாழைப்பழத்தை எடுத்து தோல் உறித்து நறுக்கி எடுக்கவும். பின்னர் நெய்யில் உலர் திராட்சைகளை வதக்கவும். வெல்ல கரைசலை தயார் செய்து எடுத்து வைக்கவும். வாழை இலையையும் தீயில் வாட்டி வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி வாழைப்பழத்தை போட்டு வதக்கி அதனுடன் தேங்காய் துருவல், வெல்ல கரைசல், ரவை, அரிசி மாவு, உலர் திராட்சைகள், ஏலக்காய் பொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும். இவை அனைத்தும் அல்வா பதத்திற்கு வந்ததும் வாழை இலையில் வைத்து இட்லி சட்டியில் வேக வைத்து எடுத்தால் வாழைப்பழ அடை ரெடியாகிவிடும்.
வாழைப்பழ அடை | Banana Ada | Evening Snacks Recipe | Pazham Ada | Healthy Snacks |Banana Snack Recipe
இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்க பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை பழமாக சாப்பிடுவதை காட்டிலும் இந்த மாதிரி ஸ்நாக்ஸ் வைகளாக சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு உணவு மேல் ஆர்வம் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“