scorecardresearch

வாழைப் பழம், பாதாம், திராட்சை… காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடணும்? எவ்ளோ சாப்பிடணும்?

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். கூடுதலாக உடல் எடையை குறைக்க வேண்டும், சர்க்கரை நோய் இப்படி பல விஷயங்கள் இருந்தால் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வி கூடுதலாக எழும்.

இந்நிலையில் உணவு தொடர்பான பல்வேறு கற்பிதங்கள் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஒரு தெளிவான புரிதலுக்கு நாம் வர வேண்டும்.

இந்நிலையில் உங்கள் காலை பொழுதை, வாழைப்பழம், ஊற வைத்த பாதாம் அல்லது ஊறவைத்த உலர் திராச்சையோடு தொடங்குங்கள். இதை காப்பி அல்லது டீயுடன் சாப்பிடாதீர்கள்.

வாழைப்பழம்: ஜீரணமாவதில் சிக்கல் இருப்பவர்கள்,  மற்றும் சாப்பிட்ட பின்பு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தூண்டும் நபர்கள் இதை சாப்பிடலாம்.

6-7 ஊறவைத்த உலர் திராச்சைகள்: பி.எம்.எஸ் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நாள் முழுவதும் சோர்வாக இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டும்.

இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளவர்கள், பி.சி.ஓ.டி, குழந்தையின்மை, தூக்கமின்மை சிக்கல் இருப்பவர்கள் ஊற வைத்த பாதாம்களை  தோல் நீக்கி சாப்பிடலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்ட  15 நிமிடங்களுக்கு பிறகு டீ அல்லது காப்பி குடிக்கலாம். இதுபோல காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த பிறகு இதை சாப்பிடலாம்.

20 நிமிடங்கள் நடை பயிற்சி முடித்துவிட்டு வந்து அல்லது தைராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பிறகு இதை சாப்பிடலாம்.

இதுபோல இதை சாப்பிட்ட பிறகு, யோகா அல்லது உடல் பயிற்சி  செய்யலாம். இதை சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு சாப்பிடலாம்.

மேலும் உலர் திராச்சையை ஊற வைத்த தண்ணீரை நீங்கள் குடிக்கலாம்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Banana almonds or raisins what should you have on an empty stomach

Best of Express