Advertisment

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வாழைப்பழ பஜ்ஜி.. சிம்பிள் ரெசிபி இதோ!

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த வாழைப்பழத்தில் சூடாக பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வாழைப்பழ பஜ்ஜி.. சிம்பிள் ரெசிபி இதோ!

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இனிப்பாக இருக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் அதில் காரமான ரெசிபி செய்து சாப்பிட விருப்புகிறீர்கள் என்றால் வாழைப்பழ பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

முழுமையாக பழுக்காத பெரிய பச்சை வாழைப்பழங்கள்

அரிசி மாவு – 2 கப்

மஞ்சள் – 1/4 கப்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய்- 1 கப்

கடலை மாவு – 3/4 கப்

பேக்கிங் சோடா- 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பழுக்காத பெரிய பச்சை வாழைப்பழத்தை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். அதை தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, மஞ்சளை எடுத்து அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து மாவு பஞ்சு போன்றதாக வரும் வரை நன்கு கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, கலக்கி வைத்துள்ள மாவுடன் வாழைப்பழத்தைப் போட்டு பிரட்டி எடுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும். மசாலா தடவி வைத்திருந்த வாழைப்பழத் துண்டுகளை எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான வாழைப்பழ பஜ்ஜி ரெடி. சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment