குதிகால் வலி, மெலிந்த தேகம், வெள்ளைப் படுதல்... என்ன பிரச்னைக்கு எந்த ரக வாழைப் பழம்? மருத்துவர் சிவராமன் விளக்கம்
"தாய்ப்பால் மறக்கடிப்புக்கு பிறகு குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்க வேண்டும் என்றால், அப்போது மட்டி வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இவை நாகர்கோவில் பகுதிகளில் கிடைக்கிறது." என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில், நாம் அன்றாட உண்ணும் பழ வகைகளில் ஒன்றான வாழைப் பழத்தில் இருக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
Advertisment
இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "குதிகாலில் வரக்கூடிய வலிக்கு செவ்வாழை பழம் சிறப்பானது. குழந்தைகள் எடை போடவில்லை என்றால், அவர்களுக்கு நேத்திரம் வாழைப்பழம் கொடுக்கலாம்.
தாய்ப்பால் மறக்கடிப்புக்கு பிறகு குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்க வேண்டும் என்றால், அப்போது மட்டி வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இவை நாகர்கோவில் பகுதிகளில் கிடைக்கிறது.
மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் உண்ண வேண்டியது நாட்டு வாழைப்பழம்.
Advertisment
Advertisement
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலுக்கும், வயிற்றில் புண் இருப்பவர்களும், உடல் சூட்டை தணிக்கவும் ஏற்ற பழம் மோரிஸ் வாழைப்பழம். தருமபுரி ஏலக்கி வாழைப்பழம், திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழம், ஈரோடு தேன்களி வாழைப்பழம் என ஒவ்வொரு வாழைப்பழத்தும் ஒரு மருத்துவ குணம் உள்ளது." என்று அவர் கூறுகிறார்.