வாழைப்பழத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி: இப்பவே ட்ரை பண்ணி பாருங்க!

வாழைப்பழ பிரெட் டோஸ்ட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Banana
Banana recipe

வாழைப்பழம், பிரெட் கொண்டு சிம்பிள் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 2
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை – 1 டீஸ்பூன்
பிரெட் துண்டுகள் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 1 டீஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் நறுக்கி வைத்த வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை போட்டு வதக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு சப்பாத்தி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

தேய்த்த பிரெட் நடுவில் வாழைப்பழ மசியலை வைத்து பிரெட்டை உருட்டி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும். அப்போது தான் வாழைப்பழ கலவை வெளியில் வராது. இப்போது அடுப்பில் பேன் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் பிரெட் உருண்டைகளை போட்டு இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் இப்போது சூப்பரான வாழைப்பழ பிரெட் டோஸ்ட் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Banana bread toast recipe making in tamil

Exit mobile version