வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வாழைப் பழம், பேரீச்சை சேர்த்து சுவையான மில்க் ஷேக் செய்யலாம்
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 2
பேரீச்சம் பழம் – 10
பாதாம் – 20
பிஸ்தா – சிறிதளவு
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 2 ஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் – 1/4 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
குங்குமப்பூ – அலங்கரிக்க
செய்முறை
முதலில் வாழைப் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப் பழம், பேரீச்சம் பழம், பாதாம், சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து அரைத்து எடுக்கவும். ஒரு கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய வைத்த மீதம்முள்ள பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறலாம். அவ்வளவு தான் வீட்டிலேயே சுவையான வாழைப் பழம், பேரீச்சம் பழம் கலந்த மில்க் ஷேக் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“