அல்வா எப்படி பண்றதுன்னு பாக்க போறோம். இது ரொம்ப டேஸ்டியா இருக்கும். செய்றது ரொம்ப ஈசி சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் வைத்து பண்றதுனால ரொம்ப ஹெல்தியாவும் இருக்கும். நீங்க குட்டி குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம். அப்படி டேஸ்டியாவும் ஹெல்தியாவும் வாழைப்பழம் வைத்து ஒரு அல்வா எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
வெல்லம் வாழைப்பழம் முந்திரி நெய் ஏலக்காய்த்தூள்
செய்முறை
Advertisment
Advertisements
நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து தோலுரித்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த வாழைப்பழத்தை போட்டு மிதமான சூட்டில் கிளறி விடவும். பின்னர் அதே மாதிரி பதம் இல்லாமல் வெல்லத்தை கரைத்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழம் ஒரு அளவுக்கு வெந்ததும் அதில் இந்த வெல்ல கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் பாதி கெட்டியானதும் அதில் நெய் ஊற்றி கிளற வேண்டும். இறக்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக முந்திரிப்பருப்பு ஏலக்காய் தூள் போடவும்.
நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் எடுத்து பரிமாறலாம். இதை பீஸ் போட்டு சாப்பிட விரும்பினால் இன்னும் கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு பின்னர் அதை ஒரு பவுலில் மாற்றி ஆறவிட்டு பீஸ் போட்டு சாப்பிடலாம்.