சுவையான வாழைப் பழ இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்
தேவையான பொருட்கள்
இட்லி மாவு- 1 கப்
வெல்லம் தூள் செய்தது- 6 டீஸ்பூன்
உப்பு- சிறிதளவு
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
பழுத்த வாழைப்பழம்- 1
தேங்காய் பால்-1 கப்
செய்முறை
வாழைப்பழ இட்லி செய்ய முதலில் அரைத்து வைத்த இட்லி மாவில் கொஞ்சம் எடுத்து அதில் 1 ஸ்பூன் வெல்லம், சிறிதளவு உப்பு ஏலக் காய்த்தூள் தென்னை வெல்லம், தேங்காய் பால் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் வாழைப் பழத்தை பொடியாக நறுக்கியோ அல்லது மசித்தோ மாவில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் இதை 5 நிமிடம் ஊற வைத்து இட்லி தட்டில் வெண்ணெய் தடவி, சிறிது மாவை அச்சுகளில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சிம்பிள், ஈஸி வாழைப் பழ இட்லி ரெடி.
இதற்கு சைட் டிஷ்
இதற்கு சைட் டிஷ் தேங்காய் சாஸு தயாரிக்கலாம். அதற்கு தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி, வெல்லம் தூள் சேர்க்கவும். கரையும் வரை கிளறவும். வெல்லம் உருகி பாலுடன் சேர்ந்ததும் இறக்கவும்.
சூடான தேங்காய் சாஸுடன் வாழைப் பழ இட்லியை ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“