வாழை இலையில் அல்வா? சுவையான ரெசிபி உங்களுக்காக

சுவையான வாழை இலை அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போ

சுவையான வாழை இலை அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Halwa recipe

Halwa recipe

வாழை இலை அல்வா ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வாழை இலை - 2
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
நெய் - 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை

Advertisment
Advertisements

இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாய்யில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும். வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் விழாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இப்போது அதில் மீண்டும் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை கடாய்யில் ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும். இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Banana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: