வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாழைப்பழம் நம் பகுதிகளிலே சுலபமாக கிடைக்கும் பழம். வாழைப்பழத்தை தோல் உரித்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் இதில் கூடுதல் சுவைக்காக சில ரெசிபிகள் செய்து சாப்பிடலாம். அந்தவகையில் வாழைப்பழ வால்நட் கேக் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதாமாவு - 1½ கப்
உப்பு - சிறிதளவு
வெண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - ½ கப்
முட்டை - 2,
வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன்,
பால் - 4 டேபிள் ஸ்பூன்
வாழைப்பழம் - 3
வால்நட் - 3 ஸ்பூன்
செய்முறை
மைதா, உப்பு ஒன்றாக சேர்த்து கலந்து சலித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், முட்டையையும் எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடித்து கலக்கவும். இத்துடன் வெனிலா எசன்ஸை கலக்கவும். பின் மசித்த வாழைப்பழம், வால்நட் இவைகளையும் இதில் சேர்க்கவும்.
அடுத்ததாக, மைதாவையும், பாலையும் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், இந்த கேக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் வைத்து ஓவனில் 170c கிரேடில் 30-40 நிமிடம் வேக விடவும். கேக் வெந்ததும் அதை ஆற வைத்து, சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். மேலே வால் நட் வைத்து அலங்கரிக்கவும். அவ்வளவு தான் சிறிது நேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சிறிய துண்டுகளாக கட் செய்து சாப்பிடலாம். வாழைப்பழ வால்நட் கேக் ரெடி.