Advertisment

உடல் எடை குறைக்க வாழைப்பழம் உதவுமா ? இதை கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நேர் எதிராக உடல் எடை குறைக்கவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இதில் முக்கியமான சத்துக்கள் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நேர் எதிராக உடல் எடை குறைக்கவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இதில் முக்கியமான சத்துக்கள் இருக்கிறது..

Advertisment

இதில் நார்சத்து, பொட்டாஷியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது, ஆனால் அதிகபடியான கொழுப்பு சத்து இல்லை.

அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் புண்கள் வராது. நமது சருமம் பொலிவாக மாறும். உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை சீராக்கும். உடலில் இருக்கும் நீரின் அளவை சீராக வைத்திருக்கும்.

வாழைப்பழத்துடன் பால் அல்லது தேன் கலந்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

இதை நீங்கள் காலை உணவாக சாப்பிடலாம். 2 வாழைப்பம் சாப்பிட்டாலே, சில மணி நேரங்கள் பசிக்காது. அஜீரணம் ஏற்படாமல் இருக்கும்.

வாழைப்பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளது இதனால் மலச்சிக்கல் ஏற்படாது. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க நீங்க தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் இருப்பதால், உடலுக்கு அதிக ஆற்றல் கொடுக்கும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உற்பதியாக உதவும். மேலும் நாட்டு பழங்களை சாப்பிடுவதால், அதிக நன்மைகள் இருக்கும் .  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment