Advertisment

நல்ல தூக்கத்தை தேடுபவரா? இந்த பழத்தை சாப்பிடுங்க; சித்த மருத்துவர் சிவராமன்

இரவில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க கூடிய நபரா நீங்கள் அப்படி என்றால் மருத்துவர் சிவராமன் கூறும் இந்த பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள் இரவில் நல்ல தூக்கம் வரும்.

author-image
WebDesk
New Update
banana

நல்ல உறக்கத்திற்கு இரவில் ஒரு வாழைப்பழம்

இன்றைய சூழலில் பலருக்கும் இரவில் தூக்கமின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர் சிவராமன் இரவு நல்ல உறக்கத்திற்கு ஒரு வாழைப்பழம் அவசியம் என்று கூறுகிறார்.

Advertisment

நீடித்த தூக்கத்தை நமக்கு இயல்பாக தரக்கூடிய உணவு வாழைப்பழம். எனவே இரவு உணவை பெரும்பாலும் ஒரு ஏழரை முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 

ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அலுவலக நேரப்படி வீட்டிற்கு வருவதற்கே ஒன்பதரை அல்லது 10 மணி ஆகிறது என்பதால் அலுவலகத்தில் கூட ஏழரை முதல் எட்டு மணிக்கு இரவு சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாம்.  

இரவு சீக்கிரம் சாப்பிடுவதால் மீண்டும் 10:00 மணிக்கு பசிக்கும் என்று நினைப்பவர்கள் ஒரு வாழைப்பழம் எடுத்து கொள்வது நல்லது.

எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தூங்குவதற்கு முன்னதாக இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கலாம். இதனால் வயிற்றுப் புண் குணமாகும், நல்ல தூக்கம் வரும், உடல் ஆரோக்கியமடையும்.

எனவே இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும். இது நல்ல உறக்கத்திற்கு உதவும். மேலும் தூங்குவதற்கு முன்னதாக ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது தூக்கத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Simple hacks to help you sleep Banana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment