தோசைக்கு மாவு அரைக்க நேரமில்லையா? இன்ஸ்டண்ட் ஆக வெறும் 10 நிமிடத்தில் தோசை செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அப்போ இந்த தோசையை ட்ரை பண்ணுங்கள். வெறும் 10 நிமிடம் போதும் சட்டுன்னு மாவு அரைத்து ஒரு க்ரிஸ்பியான தோசையை சுட்டு விடலாம்.
தேவையான பொருட்கள்:
4 காய்ந்த மிளகாய்
2 காய்கள் பூண்டு
1 கப் அரிசி மாவு
¼ கப் கடலை மாவு
2 டேபிள் ஸ்பூன் ரவை
1 உருளைக்கிழங்கு
¼ கப் தயிர்
உப்பு
1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
தண்ணீர்
நெய்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், பூண்டு, அரிசி மாவு, கடலை மாவு, ரவை, நறுக்கிய உருளைக்கிழங்கு, தயிர், உப்பு, சர்க்கரை இவை அனைத்தையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பத்து நிமிடம் மட்டும் அப்படியே வைத்து விடவும். பின்னர் ஒரு தோசை கல்லில் எப்போதும் போல வெங்காயத்தை வைத்து கல்லை சீசனிங் செய்து கொள்ளவும்.
பின்னர் தோசை ஊற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி எடுத்தால் இன்ஸ்டன்ட் தோசை ரெடியாகிவிடும். இதை காலை நேரங்களில் செய்யலாம். மேலும் வேலைக்கு செல்பவர்கள், சமைக்க நேரமில்லாதவர்கள் இதை செய்யலாம் எளிதில் வேலை முடிந்து விடும்.
பென்னே தோசை ஈசியான டிபன் செஞ்சு அசத்துங்கள் | Karnataka Benne Dosa Recipe in Tamil
இந்த வகை தோசை பெங்களூருவில் மிகவும் ஃபேமஸ். எல்லா இடங்களிலும் கிடைக்ககூடிய இந்த தோசையை இனி வீட்டிலும் செய்து கொடுங்கள்.
தோசை பிடிக்காதவர்கள் கூட இந்த தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையை பின்பற்றி எல்லோருக்கும் பிடித்த தோசையை 10 நிமிடத்தில் செய்யலாம்.