ரசம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் உணவுக்கு முன் அல்லது சாதத்துடன் சேர்த்து உண்ண ஏற்றது. இதன் புளிப்பும் காரமும் தனித்துவமான சுவையை அளிக்கிறது. அதனை வெறும் 5 நிமிடத்தில் செய்யலாம். பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி ஸ்டைலில் 5 நிமிடத்தில் ரசம் எப்படி செய்வது என்று சென்னை மருமகள் சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
எண்ணெய் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை வரமிளகாய் பூண்டு மிளகு சீரகம் புளித்த தண்ணீர் உப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கொத்தமல்லி தழை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும். பின்னர், பூண்டு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து தாளிப்பில் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு, லேசாக புளித்த தண்ணீர், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ரசம் தயார். இந்த ரசம் 5 நிமிடத்தில் தயாராகிவிடும்.