ஒரு முறை இப்படி பீட்ரூட் புலாவ் இப்படி செய்து பாருங்கள் ருசி சூப்பராக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
செய்முறை:
பாசுமதி அரிசி
2 பீட்ரூட்
இஞ்சி பூண்டு விழுது
தண்ணீர்
தேங்காய் பால்
இஞ்சி- பூண்டு விழுது
வெங்காயம்
தக்காளி
நெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
மிளகாய் தூள்
கரம் மசாலா
புதினா
செய்முறை: அரிசியை நன்றாக ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு குக்கரில் நெய் விட்டு, சூடு செய்ய வேண்டும். அதில பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் தொடர்ந்து பச்சை மிளகாய், மிளகாய் பொடி, கரம் மசாலா, புதினா சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்க்கவும். கடைசியாக பீட்ரூட் சேர்க்கவும். தண்ணீர் மற்றும் அரிசியை சேர்க்கவும். 3 விசில் விடவும். 12 நிமிடங்கள் சிமிலில் வைக்கவும். சூடான பீட்ரூட் பிரியாணி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“