உடல் எடையை குறைக்க என்ன சாப்பிட்டாலும் குறைய வில்லை. எந்த உடற்பயிற்சி செய்தாலும் குறையவில்லை என வருத்தப்படுபவர்களா நீங்கள். இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். தினமும் காலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வதற்கு முன்பாக சோம்பு தண்ணீர் குடித்துவிட்டு செய்யலாம். இதுகுறித்து டாக்டர் நித்யா அவரது டாக்டர் நித்யா வரம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சோம்பு உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். ஆனால் அதை எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம் என்கிறார் மருத்துவர் நித்யா. உடல் எடையை குறைக்க தினசரி நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சோம்பு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.
சீரக தண்ணீர் மருத்துவ அதிசயம்!|Jeera Water Health Benefits in Tamil|Seeragam Water Health Tips Tamil
டிப்ஸ் 1: சோம்பை இரவு ஊற வைத்து அதை காலையில் வடிகட்டி குடிக்கலாம்.
டிப்ஸ் 2: சோம்பு வாங்கி வறுத்து ஆறவைத்து பொடி செய்து வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் நல்ல மைய அரைத்து டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் இந்த பொடியை போட்டு 3 டம்ளர் தண்ணீரை ஒரு டம்ளராக கொதிக்க விட்டு குடிக்க வேண்டும்.
இது உடல் எடையை குறைக்க உதவும். இந்த இரண்டு முறையையும் பின்பற்றலாம். அதுமட்டுமின்றி சோம்பு தண்ணீர் பிசிஓடி பிரச்சனையையும் குணமாக்கும். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதற்கு முன் இந்த சோம்பு தண்ணீரை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.