தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால், இந்த முறை என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். வழக்கம்போல் குலாப் ஜாமுன் செய்யலாம் தான். ஆனால் இந்த முறை கடலை மாவு ஸ்வீட்டை வீட்டில் செய்து பார்க்களாமே.
கடலை மாவு பர்பி
தேவையான பொருட்கள்
சர்க்கரை – ¾ கப்
ஏலக்காய் தூள்-1/4 ஸ்பூன்
நெய்-1/2 கப்
கடலை மாவு-ஒரு கப்
நறுக்கிய பாதாம்-தேவையான அளவு
குங்மப்பூ – சிறிதளவு
செய்முறை :
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு கம்பி பதம் கிடைக்கும் வரை காத்திருக்கவும். பின் மற்றொரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து நெய் சேர்த்துகொள்ளவும். நெய் உருகியதும், அதில் கடலை மாவை சேர்த்து கிளற வேண்டும். மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளற வேண்டும். தொடர்ந்து சர்க்கரை பாகை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கிளற வேண்டும். பின்பு நெய் தடவிய பாத்திரத்தில் இதை ஊற்றி அதன் மீது பாதாம், குங்மப்பூ தூவ வேண்டும். 2 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து இந்த மாவை பர்பி அளவிற்கு வெட்டவும். இதை தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.