இட்லிக்கு நாம் தினமும் சேர்த்து சாப்பிடக்கூடிய சட்னி வகைகளை கட்டாயம் நல்லதாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஏனென்றால் இடி, தோசை தான் நாம் அதிகம் உட்கொள்கிறோம். பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி அல்லது தோசையை தான் அதிகம் சாப்பிடுகிறோம்.
அப்படி இருக்கையில் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடும் சட்னியில் அதிகம் கவனம் தேவை. இதுமாதிரி இட்லி, தோசையுடன் சேர்த்து கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 சட்னி வகைகளை பற்றி பார்ப்போம்.
- தேங்காய் சட்னி
- சின்ன வெங்காயம் சட்னி
- கொத்தமல்லி புதினா சட்னி
- பிரண்டைத் துவையல்
- நிலக்கடலை சட்னி
தேங்காய் சட்னி: இதில் உயர்ந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது குடல் இயக்கம், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இந்த சட்னியை கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் குடல் புண்ணையும் குணமாக்கும்.
சின்ன வெங்காயம் சட்னி: சின்ன வெங்காயம் நுரையீரலில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய உதவுகிறது. ரத்த சோகையை குறைக்கும், அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
கொத்தமல்லி புதினா சட்னி: உடல் எடை இழக்க, கொழுப்புகள் குறைய, உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் புதினா கொத்தமல்லி உதவுகிறது. ஆதலால் இவற்றை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இவை சமையலில் சுவையையும் கூட்டும்.
பிரண்டை துவையல்: பசியின்மையை போக்கி நல்ல பசியை தூண்டும். உடல் எடையை குறைக்க உதவும், இதய ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் மூட்டு வலி உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வர வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நிலக்கடலை சட்னி: அதிக புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு உடல் எடையை கூட்ட உதவும். மெலிந்த குழந்தைகளுக்கு வாரம் 5 முறை கொடுக்கலாம். சர்க்கரை நோயை குறைக்க உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“