மட்டன் சாப்ஸ் கிட்ட கூட நெருங்க முடியாது... தோசை, சப்பாதிக்கு வேற லெவல் டேஸ்ட்; முட்டை வைத்து இப்படி செஞ்சு பாருங்க!

தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ஒரு குழம்பு. அதுவும் நான்வெஜ் ஸ்டைலில் முட்டை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ஒரு குழம்பு. அதுவும் நான்வெஜ் ஸ்டைலில் முட்டை வைத்து எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
egg thokku

வீட்டிலேயே எளிதாகவும் சுவையாகவும் முட்டை சாப்ஸ் அல்லது முட்டை மசாலா செய்ய விரும்புகிறீர்களா? அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணுங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்:

முட்டை - 5
வெங்காயம் - 2  
தக்காளி - 2  
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும், முட்டைகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
வெந்ததும், முட்டைகளை எடுத்து குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் ஓடுகளை நீக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைத்து ஆற விடவும்.

ஆறியதும், இந்த வதக்கிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

கடாயை மூடி வைத்து, குறைந்த தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும். இப்போது, வேக வைத்துள்ள முட்டைகளை ஆங்காங்கு கீறிவிட்டோ அல்லது இரண்டாக வெட்டியோ மசாலாவுடன் சேர்க்கவும்.

முட்டைகளை மசாலாவுடன் நன்கு பிரட்டி, மேலும் 2 நிமிடங்கள் வேக விடவும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைக்கவும். இப்போது சுவையான முட்டை சாப்ஸ் (முட்டை மசாலா) பரிமாறத் தயார்.  இதை சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம்.

Dosa Egg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: