வாழைப்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. அதை காலையில் சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
காலை உணவு என்பது எப்போதும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும். இதனால் வாழைப்பழத்தை காலையில் சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளன.
வாழைப்பழம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை நீக்கும். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.
Advertisment
Advertisements
வாழைப்பழம் வேறு சில பொருட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது காலை நேரத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவியாக இருக்கும்.
மலச்சிக்கலை குணப்படுத்தும் சிறந்த இயற்கை உணவாக வாழைப்பழம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளை உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வாழைப்பழத்தை காலை நேரத்தில் கொடுக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிக அவசியமாகும். இதேபோல், மாதுளை பழத்தையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை பழச்சாறு கொடுக்கப்படுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.