உளுந்து எப்போதும் பெண் பிள்ளைகளில் உடலை வலுவாக்க உதவும். அந்த வகையில் கருப்பு உளுந்து வைத்து அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கருப்பு உளுத்தம் பருப்பு பச்சரிசி - 1/4 கப் இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 1 உப்பு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1/2 மிளகு தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, கருப்பு உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு இரண்டு கைகளிலும் தண்ணீர் தடவி, சிறிதளவு மாவை எடுத்து தட்டி நடுவில் ஓட்டை இட்டு சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான கருப்பு உளுந்து வடை தயார். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்து சாப்பிடலாம். இடுப்பு எலும்புகள் பெண் பிள்ளைகளுக்கு பலமாகும்.