தினம் தினம் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் இந்த உணவு வகைகளில் சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து ஆரோக்கியமாக உணர்வீர்கள். மூட்டு வலி ஒரு கடுமையான வலி. இது பின் முதுகுல, சோல்டர் ஜாயின்ட்ல, கை மூட்டுகள், விரல் மூட்டுகள் என அனைத்து மூட்டு ஜாயிண்ட்களிலும் வலிக்கும்.
அப்போ என்னென்ன மாதிரி உணவுகள் சாப்பிட்டால் பல வருஷம் முட்டு வலி சரியாகும் என்பதற்கான 5 உணவு வகைகள்..
கீரை வகைகள்: அனைத்து வகையான கீரையையும் சாப்பிடலாம். இது மூட்டுக்களை வலிமையாக்கி ரத்தத்தில் கிருமிகள் தேங்கா விடாமல் பாதுகாக்கும்.
பால்: பால் ஒரு குளிர்ச்சியான உணவு பொருள். நல்ல பசும் பாலை காய்ச்சி காலை மாலை என இரு வேலைகளிலும் எடுத்து கொண்டால் மூட்டு வலி குறையும். இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது. மேலும் பாலில் சிறிது மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக கால்சியம் உள்ள ஒரு அருமையான உணவு பால் என்பதால் மூட்டு வலி குணப்படுத்துவதற்கு உதவும்.
நெய் மற்றும் வெண்ணெய்: இவை எலும்புகளை உறுதிப்படுத்த உதவும். நெய் மற்றும் வெண்ணெயில் நல்ல கொழுப்புகள் உள்ளதால் எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும். கை கால்களை அசைக்கும்போது மூட்டுகளில் வரும் சத்தத்திற்கு எலும்பு மஞ்சை குறைபாடே காரணம். எனவே நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை சாப்பிடும் போது எலும்பு மஞ்சை வளார்ந்து வலியும் சத்தமும் இருக்காது.
பன்னீர் கட்டி: பன்னீர் கட்டிகளை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இது பால் கீரையை விட உடலுக்கு பல மடங்கு நன்மை பயக்க கூடியது.
பயிர் வகைகள்: கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், சோயா பீன்ஸ், பாசிப்பயிறு, கொள்ளு, நரி பயிர், வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா பருப்பு போன்ற அனைத்து பயிர் வகைகளையும் கட்டாயம் சாப்பிட்டு வந்தால் உடலில் மூட்டு வலி இருக்காது. பயிரை இரவில் ஊறவைத்து காலையில் என்ன மாதிரியான உணவு வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
குறிப்பாக எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் அதிக காய்கறிகள், பயிர் வகைகள் போன்ற சத்துள்ள பொருட்களும் இருக்க வேண்டும். இந்த ஐந்து உணவுகள் எலும்புகளை பலப்படுத்தும்.
இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறைய ஆரம்பிக்கும். வழி குறைந்த உடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும். அதுவும் வெயிலில் நடந்தால் உடலுக்கும் எலும்புக்கும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“