நீங்கள் தூங்கசெல்வதற்கு முன்பு எதையும் சாப்பிடக்கூடாது என கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை இல்லை. விரைவாக உறங்கிடவும், நல்ல தூக்கத்தை பெறவும், குறிப்பிட்ட சில உணவுகளை எடுத்துக்கொள்ளாலம். ஆனால், இரவு நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை உங்கள் தூக்கத்தை கெடுத்து, நடுராத்திரியில் எழுந்திட வழிவகுக்கும். அதேசேயம், தூக்கத்தை தூண்டும் பண்புகள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம்.
அந்த வகையில், நீங்கள் நன்றாக உறங்கிட உதவும் 3 உணவுகளை விரிவாக இங்கே காணலாம்
- வாழைப்பழம்
வாழைப்பழங்களில் பொட்டாசியம், மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன. இவை உங்கள் தசைகள் ஓய்வெடுக்கவும், மெலடோனின் அளவை கணிசமாக அதிகரிக்கவும் அனுமதிக்கின்றன. இது, உங்களை நிதானமாக்கி, படுத்து தூங்கிட உங்களை தயார் செய்திடும்.
- பாதாம்
நீங்கள் நன்றாக தூங்க உதவும் சிறந்த உணவுகளில் பாதாம் ஒன்றாகும். பாதாமில் கால்சியம் நிறைந்துள்ளது, இது உடலை அமைதிப்படுத்தவும், தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. மேலும், அமினோ அமிலமான டிரிப்டோபானை தூக்கத்தைத் தூண்டும் மெலடோனினாக மாற்றும் மூளையின் செயலுக்கு உதவுவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தயிர்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு, தயிர் தூக்கத்தை தூண்டும் சிறந்த வழியாகும். அதில், டிரிப்டோபான், கால்சியம் இரண்டும் நிறைந்துள்ளதால், தூக்கத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதுதவிர, அதில் வைட்டமின் டி மற்றும் மெலடோனின் நிறைந்துள்ளன. அவை நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும்.
போதுமான அளவு தூங்குவது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil