காலப்போக்கில் மறந்து போன மற்றும் இன்றைய காலத்தில் நிறைய பேர் பயன்படுத்தப்படாத கீரை வகைகளில் ஒன்றான பிண்ணாக்கு கீரையில் உள்ள நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
இந்த பிண்ணாக்கு கீரையை புண்ணாக்கு கீரை என்றும் கூறுவது உண்டு. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரக்கூடியதை தடுக்கும். உடலில் உள்ள அத்தனை கழிவுகளையும் வெளியேற்றி கல்லீரல் உறுப்புகளை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.
சர்க்கரை நோய் உண்டாகும் வாய்ப்பை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
Advertisment
Advertisements
உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். உடல் எடையை குறைக்க டயட் பின்பற்றுபவர்கள் தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் கீரையை பயன்படுத்தலாம் என்கிறார் மருத்துவர் மைதிலி.
புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைக்கும் முக்கியமாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.
இந்தக் கீரையையும் பருப்போடு சேர்த்து சமைத்து வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும். மூலம் பிரச்சனையை குணப்படுத்தும் ரத்தப்போக்கை குறைக்கும்.
குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுக்கும் ஆண்கள் இந்தக் கீரையை அதிகம் சாப்பிடலாம். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.