உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் உணவுகளில் ரசம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசத்தில் உள்ள ஒவ்வொன்றும் நமக்கு ஏராளமான பலன்களைத் தருகின்றன. ஜலதோஷம் முதல் காய்ச்சல் வரை அனைத்து பொதுவான நோய்களுக்கும் ஒரு பொதுமருந்தாகவும் ரசம் உள்ளது.
மேலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களான கருப்பு மிளகு, பெருங்காயம், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.
இதை கேட்டால் தினமும் ரசம் சாப்பிடுவீங்க | Dr.Sivaraman - Rasam health benefits
ரசத்தை நமது உணவுகளுடன் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. ரசம் செரிமான பண்புகளுக்கு முக்கியமான ஒன்றாகும். மேலும் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு ஒரு வரமாக இருக்கும்.
புளியில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. கூடுதலாக, ரசத்தில் கருப்பு மிளகு பயன்படுத்துவது செரிமானத்திற்கு உதவும் அமிலங்களின் சுரப்புக்கு உதவுகிறது. இது வாய்வு தொல்லையை போக்கும்.
ரசத்தில் உள்ள புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. ரசத்தில் உள்ள மசாலாப் பொருட்கள் நச்சு நீக்கிகளாகும்.
இது நீர் தேக்கத்தைத் தடுக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. கருப்பு மிளகு உடலில் வியர்வை மற்றும் அதிக சிறுநீரை உற்பத்தி செய்ய உதவுகிறது.
கருப்பு மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சிறந்த ஆண்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. மேலும், ரசத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ரசம் குடிப்பதால் புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“