நன்னாரி பொதுவாக இந்த பெயரை நாம் ஜூஸ் குடிக்கும்போது தான் கேள்விபட்டிருப்போம். நல்ல வாசனையாகவும் மருத்துவ குணம் நிறைந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நன்னாரியின் மருத்துவ குணங்கள் பற்றி மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறியிருப்பதாவது,
நன்னாரி தாவரத்தின் வேரானது, மேற்புறம் கருமையாகவும், உட்புறம் வெண்மையாகவும் இருக்கும். நன்னாரியின் வேரானது நல்ல நறுமணத்தை கொண்டது. இந்த வேரானது சிறிது கசப்பு தன்மையை கொண்டது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
நன்னாரியில் பல்வேறு மருத்துவக்குணங்கள் உண்டு. அதில் முக்கியமானது நன்னாரியை தண்ணீரில் ஊறவைத்து குடித்தாலே போதும் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
நன்னாரி மருத்துவ பலன்கள்|Indian Sarsaparilla Hemidesmus indicus health benefits|doctor karthikeyan
அதுமட்டுமின்றி வாதம் மற்றும் தோல்நோய்களையும் போக்கும். நன்னாரி வேரானது உடல் உஷ்ணத்தை தணிக்க பயன்படுகிறது. அதனால் கூட வெயில் காலங்களில் அதிகம் நன்னாரி சர்பத் விற்க படுகிறது.
பித்த நோய்கள். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல் போன்றவற்றையும் குணமாக்கும். மேலும் நன்னாரி வேரானது அதிகமான மருத்துவப் பொருட்களுடன் கூட்டாக சேர்க்கப்படுகிறது.
அதாவது லேகியங்களிலும், திரவியங்களிலும், வாசனை பொருட்களாகவும், மருந்துப் பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றார் மருத்துவர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.