பூண்டு சாதம் என்பது சுவையான ஒரு உணவு மட்டுமல்ல, அது பல ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது. பூண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் இதற்கு முக்கியக் காரணம். சுவையான பூண்டு சாதம் எப்படி செய்வது என்று Mmshaandkitchen இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய்
சீரகம்
பூண்டு
மிளகாய் தூள்
சமைத்த சாதம்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
முதலில், ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும், சீரகம் மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும். இவை பொன்னிறமாக வதங்க வேண்டும்.
அடுத்து, அரை டீஸ்பூன் மிளகாய் தூளை சேர்க்கவும். எண்ணெயில் மிளகாய் தூளின் நிறம் லேசாக மாறும் வரை வதக்கவும். இப்போது, ஒரு கப் சமைத்த சாதத்தை கடாயில் சேர்த்து, மசாலா பொருட்களுடன் நன்கு கலக்கவும்.
சாதம் ஏற்கனவே உப்பு சேர்த்து சமைக்கப்பட்டிருப்பதால், தனியாக உப்பு சேர்க்கத் தேவையில்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால், சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
கடைசியாக, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, ஒரு முறை நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான், சுவையான அரிசி உணவு தயார். இதைச் சுடச்சுட பரிமாறவும். இதன் அருமையான சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நிச்சயம் கவரும்.
பூண்டு வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது செரிமான அமைப்பை வலுப்படுத்துவதுடன், பசியையும் அதிகரிக்கிறது. மேலும், வயிற்றில் அமில உற்பத்தி அதிகமாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்தவும் பூண்டு உதவும். பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதனால் இதை வாரம் இரண்டு முறை கூட சாப்பிடலாம்.