மலச்சிக்கல் என்பது இன்றைய சூழலில் நிறைய பேருக்கு இருக்க கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். அதற்கு நாம் சாப்பிடும் உணவு முறை தான் காரணம். ஆனால் அதை சரிசெய்ய எண்ணெய் குடித்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு நிபுணர் டாக்டர் மைதிலி, தனது வீடியோவில் காலையில் வெறும் வயிற்றில் 15 மி.லி எண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள், வயிற்று வலி, தலைவலி, ஆர்த்ரிடிஸ் வலி குறையும் என்று கூறியுள்ளார். அதை தற்போது காணலாம்.
காலையில் விளக்கெண்ணெயை தண்ணீர், தேன் அல்லது நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்வதால் எடை இழப்பு, தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலசிக்கல் நீங்க விளக்கெண்ணெய் எப்படி பயன்படுத்தனும்? Castor oil benefits in tamil / vilakennai
விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வதன் நன்மைகள்:
காலையில் வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது மலச்சிக்கலைப் போக்கி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், வயிற்று வலி, வீக்கம், தலைவலி, மை கிரேன் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற வலிகளைப் போக்க உதவுகிறது.
இது எடை இழப்பிற்கும் உதவும். கூடுதலாக, தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பொலிவான தோற்றத்தை அளிக்கிறது.
எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்பவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் மற்றும் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சினைகள் உள்ளவர்கள் எண்ணெயை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
விளக்கெண்ணெய் பல நன்மைகளை வழங்கும் சக்திவாய்ந்த இயற்கை மருந்து ஆகும். இருப்பினும், மருத்துவ ஆலோசனை பெற்று எண்ணெயை எடுத்துக் கொள்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.