பேச்சுலர்ஸ் எல்லாம் சோம்பேறித்தனம் பார்க்காமல் சட்டுன்னு சமைக்க முயற்சி செய்யும் ஒரு டிஷ்தான் முட்டை சாதம். அதையும் எப்படி சுவையாக செய்யலாம் கொஞ்சம் காய்கறிகள் எல்லாம் சேர்த்து நல்ல வாசனையுடன் சமைக்கலாம் என்று கிஸ்டர் கிரிஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை
எண்ணெய்
சின்னதாக நறுக்கிய இஞ்சி
சின்னதாக நறுக்கிய பூண்டு
காய்கறிகள் (கேரட், பீன்ஸ்)
வடித்த சாதம்
மிளகாய் தூள்
கரம் மசாலா தூள்
மிளகு தூள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, முட்டைகளைச் சேர்த்து முதலில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டைச் சேர்க்கவும்.
அதனுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து, முக்கால் வேக்காடு வரை வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், வடித்து வைத்திருந்த சாதத்தைச் சேர்க்கவும்.
பிறகு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் 10 நிமிடங்கள் வரை நன்கு வறுக்கவும்.
அவ்வளவுதான் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் மனமாகவும் சுவையாகவும் இருக்கும். இதனை லஞ்ச்க்கு கொண்டு போகலாம். காலையில் சிற்றுண்டியாகவோ, மதிய உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ முட்டை சோறு எடுத்துக்கொள்ளலாம்.