பெண்களின் கருவுற்ற நாட்களில், அவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. கருவில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் ஊச்சத்து நிறைந்த உணவு வேண்டும்.
கருவுற்ற நாட்களில் பெண்களுக்கு அதிக சோர்வு, வாந்தி, மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். இதனால் அவர்கள் பலவீனமடைவார்கள். இந்நிலையில் இதற்கு இரும்பு சத்து குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம்.
சத்து மாத்திரைகளை சாப்பிடுவதுடன், முருங்கை இலையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக இதில் இரும்பு சத்து மட்டுமில்லை, இதில் காசியம், மெக்னீசியம் இருக்கிறது.
கருவுற்ற காலங்களில் பாரசிட்டாமால் அல்லது வலி மாத்திரைகள் கொடுக்கமாட்டார்கள். இதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முருங்கை இலையை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது. அவர்களின் கார்ட்டிசோல் (cortisol) அளவை சீராக்குகிறது.
இந்நிலையில் கருவுற்ற பெண்களுக்கும் மலச்சிக்கல், வயிறு உப்புதல், வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். முருங்கை இலையில் 9 % நார்த்து இருப்பதால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சத்துகளை உடல் உள்வாகிக்கொள்ளும். மேலும் இதில் வைட்டமின் பி இருப்பதால், அஜீரணம் தொடர்பான மற்ற சிக்கலையும் இது தடுக்கும்.
தாய் பால் சுரப்பதிலும், முருங்கை இலை உதவுகிறது. இந்நிலையில் இதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு டேபிள் ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை 100 எம்.எல் சூடான நீரில் சேர்த்து குடிக்கலாம்.
இந்நிலையில் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் மதியம் மூன்று மணிக்கு முன்பாக குடித்துவிடுங்கள். அப்படி குடித்தால் ஜீரணிப்பதில் சிக்கல் இருக்காது.
இந்நிலையில் இது உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், தொடர்ந்து குடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் முருங்கை இலையை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்.
இந்நிலையில் 100 கிரம் முருங்கையில் 28 மில்லி கிராம் இரும்பு சத்து உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil