இளநீரை விட சிறந்த பானம் இதுதான்... சுட்டெரிக்கும் வெயிலில் இதை விடாதீங்க: டாக்டர் சிவராமன்
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். அவர் கூறும் இந்தப் பானம் இளநீரை விட சிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். அவர் கூறும் இந்தப் பானம் இளநீரை விட சிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். அவர் கூறும் இந்தப் பானம் இளநீரை விட சிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.
மே மாதம் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இப்போதே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னதாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தாலும், தற்போது அடிக்கும் வெயில் அதன் தடத்தை மறைத்து வருகிறது. அதனால், மே மாதம் நெருக்கும் போது வெயில் இன்னும் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் முறையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது அவசியம். தவிர, இயற்கையான இளநீர், சர்பத் போன்ற பானங்களையும் பருகி வரலாம்.
அந்த வகையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். அவர் கூறும் இந்தப் பானம் இளநீரை விட சிறந்தது என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், "மோர் மட்டும் தினசரி நமது குழந்தைகளுக்கு பழக்கி ஆக வேண்டிய பானம்.
தற்போது இருக்கும் பானங்களை விட, குறிப்பாக இளநீரை விட சிறந்த பானம் மோர். பால் நல்லதல்ல என்று சொன்னீர்களே, இப்போது மோர் மட்டும் நல்லதா? என்றால், பால் மோராக மாறும்போது, பாலில் இருக்கும் அத்தனை கெடுதலும் போய்விடும். பால் மோராக மாறும்போது, அதில் உற்பத்தியாகும் லாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா கோடிக்கணக்கான நன்மைகளைச் செய்கிறது.
Advertisment
Advertisements
'மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி' என்று சித்த மருத்துவத்தில் சொல்வார்கள். இதற்கு பொருள், நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். மோரை நிறைய தண்ணீருடன் பெருக்கி குடிக்க வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிட வேண்டும். இந்த மூன்றையும் சாப்பிடுபவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்." என்று அவர் கூறுகிறார்.
மோர் தயார் செய்வது எப்படி?
ஒரு கப் தயிர் எடுத்து அதில் சில துண்டுகள் தோல் நீக்கிய இஞ்சி சேர்க்கவும். அதனுடன் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும். சுவைக்காக சில துண்டுகள் மாங்காய் சேர்க்கவும். அவற்றுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை தழை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இதனை அப்படியே மிக்சியில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடித்து எடுக்கவும். அதனை ஒரு வடிகட்டியால் வடித்துக் கொள்ளவும். இப்போது சுவையான மோர் ரெடி.