Advertisment

டிஃபனுக்கு பெஸ்ட் சாம்பார் இது தான்: வெங்கடேஷ் பட் தாயார் கற்றுக் கொடுத்த ரெசிபி

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் டிஃபனுக்கு பெஸ்ட் சாம்பார் ஒன்றை செய்து காட்டியுள்ளார். இந்த சாம்பார் செய்யும் முறையை தனது தாயார் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
tiffin sambar

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் டிஃபனுக்கு பெஸ்ட் சாம்பார் ஒன்றை செய்து காட்டியுள்ளார்.

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் டிஃபனுக்கு பெஸ்ட் சாம்பார் ஒன்றை செய்து காட்டியுள்ளார். இந்த சாம்பார் செய்யும் முறையை தனது தாயார் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

டிஃபனுக்கு பெஸ்ட் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை: 

முதலில் சாம்பார் பொடி செய்ய வேண்டும். அதற்கு 

மங்களூர் காய்ந்த மிளகாய் அல்லது கஷ்மீரி மிளகாய் 100 கிராம்

காய்ந்த வரமிளகாய் 100 கிராம்

தனியா 200 கிராம்

சீரகம் 100 கிராம்

மிளகு 100 கிராம்

வெந்தயம் 100 கிராம்

ஆகிய பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதை அப்படியே மிஷினில் கொடுத்து தூளாக அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் சாம்பார் பொடி.

துவரம் பருப்பு 150 கிராம், பயித்தம் பருப்பு 150 கிராம் 200 கிராம் சின்ன வெங்காயம், 2 பெரிய முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கியது. இந்த 4 பொருட்களையும் குக்கரில் ஒன்றாகப் போட்டு கால் டீஸ் பூன் மஞ்சள்தூள் போட்டு, 5 டம்பள்ர் தண்ணீர் ஊற்றில் குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது திறந்து பார்த்தீர்கள் என்றால் முருங்கைக் காய், வெங்காயம் எல்லாம் நன்றாக வெந்திருக்கும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

50 கிராம் புளியை ஊரவைத்து 100 மி.லி புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

வெல்லம் 50 கிராம் தூள் செய்து வைத்துக்கொளுங்கள்.

4 தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். ஒரு கடாய் எடுத்து வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். 
நெய் சூடானதும் கறிவேப்பிலை சிறிது போடுங்கள். அடுத்து நறுக்கி வைத்துள்ள 4 தக்காளியைப் போடுங்கள். தக்காளியை நன்றாக வதக்குங்கள். நன்றாக வதங்கியது. 100 மி.லி புளி கரைசலை ஊற்றுங்கள்.

அடுத்து, இதில் 50 கிராம் வெல்லத்தைப் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள். அடுத்து, 150 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். புளி, வெல்லத்தின் வாசனை போகிற வரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். 8-10 நிமிடங்கள் வேக வையுங்கள்.  திக்கானதும், வேகவைத்துள்ள பருப்பு, சின்ன வெங்காயம், முருங்கைக் காய் ஆகியவற்றை எடுத்து இதில் ஊற்றுங்கள்.  நன்றாகக் கலக்கி விடுங்கள். அடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றுங்கள். அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள் கலக்குங்கள். இந்த சாம்பாரில் ஒரு கப் கொத்தமல்லி நறுக்கி தூவுங்கள். கலக்காதீர்கள். இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது, ஒரு பான் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 5 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றுங்கள். அதில் 1 டீஸ் பூன் கடுகு போடுங்கள். இதில், 3 வெங்காயம் அளவான துண்டுகளக நறுக்கி போடுங்கள். லேசான பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள். கட்டிப் பெருங்காயம் 15 கிராம் அளவு எடுத்து 50 மி.லி சுடு தண்ணீரில் கரைத்து வெங்காயத்தின் மேல் போடுங்கள். கேஸ் ஆஃப் பண்ணி விடுங்கள். இதில், நாம் ஏற்கெனவே தயார் செய்துவைத்துள்ள, சாம்பார் பொடியை 2 1/2 டேபிள் ஸ்பூன் எடுத்து வெங்காயத்தின் மீது பொட்டு நன்றாக கலக்கி விடுங்கள்.

அடுத்து, இதை எடுத்து ஏற்கெனவே செய்து வைத்துள்ள சாம்பாரில் ஊற்றுங்கள். இதை அப்படியே ஸ்டவ்வில் வைத்து பற்ற வைத்து ஒரு கொதி வந்ததும் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிவிடுங்கள். இப்போது சாம்பாரில் மீண்டும் கொத்தமல்லியைத் தூவி, அரை டேபிள் ஸ்பூன் நெய் போட்டு மூடி வைத்துவிடுங்கள். ஒரு 15 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் செம சுவையான டிஃபன் சாம்பார் தயார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment