இன்றைய சூழலில் உணவு பழக்கத்தால் அனைவருக்கும் தைராய்டு பிரச்சனை சுலபமாக வந்து விடுகிறது. இன்றைய சூழலில் அனைவருக்கும் தைராய்டு பிரச்சனை ஈஸியாக வந்து விடுகிறது. தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் பின்பற்றக் கூடிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இதுகுறித்து அவர் டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தைராய்டு இருந்தால் தலை முடி உதிர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சில வழிமுறைகளை பின்பற்றினால் தைராய்டு பிரச்சனையில் இருந்து மீண்டு விடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார்.
டிப்ஸ் 1: கடையில் வாங்கி பயன்படுத்த கூடிய அனைத்து ஹெல்த் ட்ரிங்ஸ் அல்லது மிக்ஸ்களை உடனே நிறுத்த வேண்டும்.
டிப்ஸ் 2: தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும்.
டிப்ஸ் 3: தினமும் காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளியில் அவசியம் ஒரு அரை மணி நேரம் நிற்கலாம்.
டிப்ஸ் 4: தினமும் இரவு கொத்தமல்லி விதைகளை ஊறவைத்து காலையில் அந்த தண்ணீர் குடிக்கலாம்.
5 tips for thyroid !
டிப்ஸ் 5: தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான தண்ணீராக தினசரி எப்போதும் எடுத்து கொள்ளலாம்.
டிப்ஸ் 6: இனிப்பு அல்லது திண்பண்டங்கள் சாப்பிட தோன்றும் போது பழங்கள் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.