தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
சீரக தூள்
கரம் மசாலா தூள்
மிளகு
இஞ்சி பூண்டு விழுது
அரிசி மாவு
சோள மாவு
மைதா மாவு
உப்பு
எண்ணெய்
சிக்கன் 65 ஓரம் கட்டிடுவீங்க, இதை சாப்பிட பிற சைவ சிக்கன் 65 | Side dish recipe in tamil | veg
செய்முறை
உருளைக்கிழங்கு தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கிழங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்கை உடையாமல் எடுத்து ஆறவைத்து அதனுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகப்பொடி மிளகுத்தூள், உப்பு, சிறிது எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அனைத்தையும் கலந்து விடவும்.
இதனுடன் சிறிது மைதா மாவு, கான்ஃபிளவர் மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். அனைத்து கிழங்கிலும் மசாலாக்கள் பரவும் படி கலந்து விடவும். இதில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு பத்து நிமிடம் இதனை ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். உடன் சிறிது கருவேப்பிலை, பச்சை மிளகாய் பொறித்து எடுத்து கலந்து சாப்பிட ஆரம்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“