உடல் சுறுசுறுப்பாக இருக்க காலை மாலையில் சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும். மேலும் வெயிலில் நிற்பதால் நமக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும். இந்த வைட்டமின் டி சத்து உணவில் கொஞ்சம் குறைவாக தான் உள்ளது. உதாரணத்திற்கு மோர், பட்டன் காளான் போன்றவற்றில் தான் உள்ளது.
எனவே உணவில் வைட்டமின் டி குறைவாக உள்ளதால் வைட்டமின் டி சத்து கிடைக்க வெயிலில் நிற்பது தான் சரியான தீர்வாகும். காலை 7 மணி முதல் 9 மணி வரை வெயிலில் நிற்பது மிகவும் சிறந்தது.
நகரங்களில் வாழ்பவர்கள் சூரிய ஒளி சிறிது எங்கு கிடைத்தாலும் அங்கு ஒரு அரைமணி நேரம் நிற்க வேண்டும். காலையில் 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் இருக்கும் வெயில் உடலுக்கு நல்லது.
குறிப்பாக மதிய நேரங்களில் அடிக்கும் வெயிலில் நிற்க கூடாது. எனவே அந்த நேரங்களில் வெளியில் சுற்றுவதையும் நடைபயிற்சி மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
காலையில் 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 6 மணி வரையிலும் இருக்கும் வெயிலில் ஒரு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தலும் உடலுக்கு நல்லது. எனவே அந்த நேரங்களில் கட்டாயம் வெயில் உடலில் பட வேண்டும். அப்போது தான் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.
கிராமங்களில் குழந்தைகளை காலையிலும் மாலையிலும் குளிக்க வைத்து சிறிது நேரம் வெயிலில் வைத்து கொண்டு நிற்பார்கள். அது குழந்தையின் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க செய்வதாகும்.
எனவே வைட்டமின் டி சத்து சூரிய ஒளி மூலமே அதிகம் கிடைக்கிறது. அதனால் காலை - மாலையில் சிறிது நேரம் வெயிலில் நிற்பதோ நடப்பதோ நல்லது.
சூரிய ஒளி உடலில் படாமலேயே இருந்தாலும் தோல் நோய்கள் வரக்கூடும். மேலும் உடல் சோம்பேறித்தனமாக இருக்கும். எனவே காலை - மாலை வெயில் உடலில் படுவது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“