சளி, இருமலுக்கு ஏற்ற வகையிலும் அதை உடனடியாக சரி செய்ய வெற்றிலை சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.
Advertisment
வெற்றிலை - 6 எண்ணெய் - 3 டீஸ்பூன் தக்காளி - 3 புளி - நெல்லிக்காய் அளவு சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 3 சீரகம் - 1 ஸ்பூன் மிளகு - 15 கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 5 பல் கடுகு விதை - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பருப்பு - 1 டீஸ்பூன் கடலை விதைகள் - 2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து அதில் நிலக்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும். இதை இப்போது தனியாக எடுத்து வைக்கவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும். அடுத்து புளி சேர்த்து வெற்றிலையை நறுக்கித சேர்க்கவும்.
வதக்கி பின் அடுப்பில் இருந்து இறக்கி மிக்ஸியில் போட்டு வறுத்த கடலையும் சேர்த்து அரைக்கவும். அதன் பின் கடைசியாக எப்போதும் போல் தாளிப்பு பொருட்கள் போட்டு தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான வெற்றிலை சட்னி ரெடி.