வீடே மணக்க மணக்க குஷ்கா; அதுவும் குக்கரில்... இந்த வீக்எண்ட்ல இத ட்ரை பண்ணுங்க மக்களே!

வீடே மணக்க மணக்க பாய் வீட்டு ஸ்டைலில் குஷ்கா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வீடே மணக்க மணக்க பாய் வீட்டு ஸ்டைலில் குஷ்கா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
குஸ்கா

குஸ்கா

பாய் வீட்டு ஸ்டைல்ல நம்ம வீட்லையும் குஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

Advertisment

தேவையான பொருட்கள்

அரிசி ( தேவைப்பட்டால் பாஸ்மதி,சீரகசம்பா)
எண்ணெய்
நெய்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
பிரியாணி இலை
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
தக்காளி
உப்பு
கொத்தமல்லித்தழை 
புதினா 
காஷ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள்
தயிர்
எலுமிச்சை பழம் சாறு

செய்முறை

Advertisment
Advertisements

தேவையான அளவு அரிசியை எடுத்து ஊற வைக்க வேண்டும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் அதில் சிறிது பட்டை, ஏலக்காய், கிராம்பு,பிரியாணி இலை போட்டு பொரிந்து வந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கவும் அடிப்பிடிக்காமல் இருப்பதற்கு ஸ்டவை லோ ஃப்ளேமில் வைத்து செய்யவும். உப்பு சேர்த்து நன்கு வதக்கியதும் நறுக்கிய தக்காளி ஒரு கைப்பிடி அளவிற்கு நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் புதினாவை சேர்த்து வதக்கவும். 

ஈஸியான குஸ்கா செய்வது எப்படி bai veetu kuska recipe in tamil / empty biryani lunch box recipe

கலருக்கு காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் காரத்திற்கு மிளகாய் தூள், கெட்டியான தயிர் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு எலுமிச்சை பழம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் உப்பு சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை விட்டு மீண்டும் ஒரு கொதி விடவும். பின்னர் எப்போதும்போல தம் போட்டு இறக்கினால் சூடான குஸ்கா ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: