ரவா லட்டு அசத்தலான சுவையில் கிடைக்க வெங்கடேஷ் பட் சொன்ன மாதிரி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
4 டீஸ்பூன் நெய்
ஒரு கை பிடி முந்திரி பருப்பு
10 பாதாம் பருப்பு
பூசணி விதை அரை கப்
தேங்காய் துருவல் அரை மூடி
2 கப் ரவை
1 ½ கப் பொடி செய்த சர்க்கரை
4 ஏலக்காய்
பால் அரை கப்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, பாதாம் நறுக்கியது, பூசணி விதைகளை வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் தேங்காய் துருவலை சேர்த்து, வறுக்க வேண்டும். அதிகமாக நிறம் மாற வேண்டாம். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். இப்போது மீண்டும் நெய் சேர்த்து ரவையை வறுக்க வேண்டும். மிதமான தீயில் வறுக்க வேண்டும். லேசாக சிவப்பு நிறமாக மாறினால் போதும். இந்நிலையில் அடுப்பை அணைத்து அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து கொள்ளவும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து பொடித்துகொள்ளுங்கள். தற்போது நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து தேங்காய் துருவல், சேர்த்து கொள்ளுங்கள், தொடர்ந்து வறுத்த நட்ஸ் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து பாலை மெதுவாக சேர்த்து கிளரவும். சூடு ஆறியதும். சிறுது நேரம் கழித்து உருண்டைகளாக பிடித்தால். மிருதுவான ரவா லட்டு ரெடி.