அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் உலக பணக்காரர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவர் இந்தியாவுக்கு அடிக்கடி பயணிப்பார். அப்போது, பிரபல உணவு சமையல் கலைஞரான எய்டன் பிர்னத்துடன் இணைந்து சப்பாத்தி சமைத்துள்ளார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாகின. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பில்கேட்ஸ்க்கு ரெசிபி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதாவது பில்கேட்ஸ்க்கு மோடி அளித்த பதிலில், “மகிழ்ச்சி. தற்போது இந்தியாவில் சிறுதானிய உணவுகள்தான் ட்ரெண்ட் ஆக உள்ளன.
இந்த உணவுகள் உடல் நலத்துக்கு நல்லது. இந்த சிறு தானியங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. இதனை நீங்கள் சமைத்து பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இது பில்கேட்ஸ்-ஐ வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் ஐ.நா. சபை 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானிய ஆண்டு என அறிவித்துள்ளது. இந்தியாவிலும் சிறுதானியத்தை பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உலக பணக்காரர்களுள் ஒருவரான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் முதன்மையானவர் ஆவார். இவர் தற்போது அந்தத் தொழிலில் இருந்து விலகி சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையை ஒழிக்கும் திட்டங்கள் குறித்து முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/