பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் அதை செய்வதற்கு எடுக்கும் நேரம் தான் அதிகமாக உள்ளது. அதனாலேயே நிறைய பேர் பிரியாணி செய்ய தயங்குவார்கள். இறைச்சி இல்லாமல் பிரியாணியா? சுவை இருக்காது என்று தான் பலரும் அதை வேண்டாம் என்பார்கள். ஆனால் இறைச்சி இல்லாமல் பிரியாணி செய்தாலும் சுவையாக இருக்கும். இறைச்சி இல்லாமல் சுவையாக தக்காளி பயன்படுத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
தக்காளி - 4
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
புதினா
கொத்தமல்லி இலைகள்
தயிர்
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய் - 100 மிலி
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை வாசம் நீங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், புதினா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தயிர் மற்றும் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு, முந்திரி போட்டு கொதிக்கவிடவும்.
தக்காளி பிரியாணி | Thakkali Biryani | How to Make Thakkali Biryani | CDK 598 | Chef Deena's Kitchen
கொதி வந்ததும் அதில் சிறிது பெருங்காயத்தூள் போட வேண்டும். ஜீரணத்திற்கும் நல்லது மணமாகவும் இருக்கும். நல்ல கொதிவந்ததும் ஊறவைத்த அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி விசில் விட்டு இறக்கினால் தக்காளி பிரியாணி ரெடியாகிவிடும்.
மேலே சிறிது நெய் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.