ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி இப்போது ஸ்விக்கி நிறுவனம் தங்கள் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஸ்விக்கி நிறுவனம் இந்தாண்டிற்கான லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி முதல் இடம் பிடித்து இருக்கிறது. இந்தாண்டு மட்டும் சுமார் 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூற்ப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு 9 பிரியாணி, அதாவது கிட்டதட்ட ஒரு நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ச்சியாக 9வது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி தொடர்ந்து முதலிடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி அதிகபட்சமாக 4.9 கோடி முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி ஆர்டரில் 97 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் ஹைதராபாத் முதலிடத்திலும் 77 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் பெங்களூர் 2ஆவது இடத்திலும் 46 லட்சம் பிரியாணி உடன் சென்னை 3வது இடத்திலும் உள்ளது.
சிக்கன் பிரியாணிக்கு பிறகு மட்டன் பிரியாணி ஹைதராபாத்தில் மட்டும் 22 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், புதிதாக ஸ்விக்கியில் இணைந்தவர்களில் சுமார் 28 லட்சம் பேர் தங்களது முதல் ஆர்டராக பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சொமாடோவிலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் உணவு டெலிவிரி தளமான சொமாடோவிலும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.
அந்த வகையில் 9,13,99,110 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 5, 84,46,908 பீட்சாக்கள் மக்கள் விரும்பி வாங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.