Advertisment

இந்த சாதம் கொடுத்து அனுப்பினா டிப்பன் பாக்ஸ் காலியாதான் வீட்டுக்கு வரும்: செப் தாமுன்வின் பிஸிபேளாபாத் ரெசி

மதியம் சாப்பிட, இப்படி பிஸிபேளாபாத் செய்து கொடுத்துவிடுங்க. எல்லோரும் இதை விரும்பி சாப்பிடுவாங்க.

author-image
WebDesk
New Update
sasa

மதியம் சாப்பிட, இப்படி பிஸிபேளாபாத் செய்து கொடுத்துவிடுங்க. எல்லோரும் இதை விரும்பி சாப்பிடுவாங்க. 

தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - 4 கப்

விருப்பமான காய்கறிகள் - 1 கப்

(கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)

புளி கரைசல் - 1/4 கப்

சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பூண்டு - 10

நெய் - 1 தேவையான அளவு

பச்சைமிளகாய் - 5

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க :

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காய தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

Advertisment

செய்முறை : 

வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.

பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.

காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment