பாகற்காய் சாப்பிட்டால் நீரிழிவு நோய்க்கு நல்ல தீர்வு கிடைக்கும், அதன் சாறில் டீ போட்டு குடிக்கலாம், அதன் சாறை பாதங்களில் ஊற்றலாம் என்றெல்லாம் பலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு செய்தால் சர்க்கரை நோய் குறையுமா? பாகற்காய் சாப்பிடுவது நல்லதா? எந்த பதத்தில் இருக்கும் பாகற்காயை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுவது குறித்து பார்க்கலாம்.
நீரிழிவு என்பது நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறினால் ஏற்படக்கூடிய ஒன்றாகும். வளர்சிதை மாற்றத்தை சரிசெய்ய வேண்டுமென்றால் அதற்கு எடுத்துக் கொள்ளும் உணவுகளும் உடற்பயிற்சியும் மிக முக்கியம்.
சில வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. அந்த உணவுகளால் ரத்தச் சர்க்கரை அளவு குறையாது, ஆனால் ரத்தத்தில் சர்க்கரை கலக்கும் வேகம் குறையும்.
பாகற்காய் பிஞ்சு மற்றும் பழமாவதற்கு நடுத்தரமான நிலையில் இருக்கும்போது சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. பாகற்காய் சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சிவிடும். இதனால் உங்கள் இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். ஆனால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாது. சிலர் தினசரி உணவில் பாகற்காயை எடுத்து கொள்கின்றனர்.
பாகற்காய் சாறு குடிப்பது நல்லதுதான். ஆனால் அதனால் உடலில் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படாது. பாகற்காய் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையுமா என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. ரத்த குளுக்கோஸ் உயர்வதற்கு காரணம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகள் தான். அதனால் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்காமல் ரத்த சர்க்கரை அளவு குறையாது.
கசப்பு சுவையுள்ள உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவி செய்யும். பாகற்காய் போன்ற கசப்பு தன்மையுடைய உணவுகள் ஒருபோதும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்காது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“