Advertisment

தினமும் பாலில் சிறிது கருஞ்சீரகம்... இவ்ளோ நன்மை இருக்கு!

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன.

author-image
WebDesk
Aug 22, 2022 09:54 IST
தினமும் பாலில் சிறிது கருஞ்சீரகம்... இவ்ளோ நன்மை இருக்கு!

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்து அதன் மூலம் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் விரட்டி அடிக்க முடியும்.

Advertisment

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட , தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும்.

குழந்தைப்பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள் இருக்கக்கூடும். கர்ப்பப்பையைத் தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வராமல் தடுக்கலாம். மேலும் மீண்டும் கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படாது. கருஞ்சீரகம் பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துவதில் கை கொடுக்கின்றது.

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது பனை வெல்லம் சேர்த்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி சுத்தமடையும்.

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களில் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை குறிப்பிடத்தக்கது. வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும். இந்த எளிய வீட்டுக் குறிப்பைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

நம் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வியாதிகளுக்குப் பாக்டீரியாக்களே முக்கிய காரணமாகும். இந்தப் பாக்டீரியாக்களே காது தொற்று வியாதியிலிருந்து நிமோனியா காய்ச்சல் வரை ஏற்படுத்துகின்றன. கருஞ்சீரகம் இந்த பாக்டீரியாக்களின் எதிரி ஆகும். கருஞ்சீரகம் இந்த பாக்டீரியாக்களைக் கடுமையாகத் தாக்கி உடலை நோயின் பிடியிலிருந்து மீட்கிறது. மேலும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தோல் வியாதியைக் குணப்படுத்தக் கருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளலாம்.

இதனை பொடியாக அரைத்து, அந்தப் பொடியை தோல் வியாதி பிரச்சனை இருக்கும் இடங்களில் தடவி விடலாம். இம்மாதிரியான நோய்களுக்கு கருஞ்சீரகம் அற்புதப் பலன்களைக் கொடுக்கும். சருமம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க கருஞ்சீரகப்பொடியை குளியல் பொடியோடு சேர்த்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம்

வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். மருந்து ,மாத்திரைகளை விட கருஞ்சீரகம் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது. அதுபோக தொடர்ச்சியாகக் கருஞ்சீரகத்தை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு அல்சர் வியாதி வர வாய்ப்பு இல்லை.

நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவையான ஒன்றுதான். இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு நன்மை செய்யும் ,கெட்ட கொலஸ்ட்ரால் தீங்கு செய்யும். கருஞ்சீரகம் இந்த வகையில் ஒரு அற்புதமான மருந்து பொருளாக உள்ளது. ஏனென்றால் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதே சமயம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.

விக்கல் ஒரு சில சமயம் தொடர்ந்து விடாமல் வந்தபடியே இருக்கும். தண்ணீருக்கும் வேறு எந்த விஷயத்திற்கும் கூட விக்கல் கட்டுப்படாது. அந்த சமயத்தில் கருஞ்சீரகம் உதவும். கருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் தொடர்ந்து நிற்காமல் வரும் விக்கல் கூட நின்று விடும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை இருக்கும். பூச்சித்தொல்லையால் அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படும். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த மாதிரி குழந்தைகளுக்கு வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து பருக தரலாம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்வதால் வயிற்றில் உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.

கருஞ்சீரகத்தை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதால் செரிமானம் சிறப்பான முறையில் நடைபெறும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரண வழியைக் காட்டுகிறது. ஒரு பிடியளவு கருஞ்சீரகம் மற்றும் ஒரு பிடியளவு கொத்தமல்லி தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெந்நீரிலோ, பாலிலோ சேர்த்துத் தொடர்ந்து அருந்தி வர, அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.

கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள்,கொப்பளங்கள்,புண்கள் மறையும்.

இன்று நிறைய பெண்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு முடி அதிகமாகக் கொட்டுகின்றது. இவர்கள் கருஞ்சீரக விதை எண்ணெய்யைத் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் தலைமுடி கொட்டும் பிரச்சனை சரியாகி முடி நன்றாக வளர்ச்சி அடையும்.

இன்று பல்வேறு கலப்படமான பொருட்களின் மூலம் நம் உடலில் பல ரசாயனங்கள் கலந்து சேர்ந்து விடுகின்றன. இந்த கழிவுகள் இரத்தத்திலும் நுரையீரல்களிலும் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினையில் சரியாக கருஞ்சீரகம் சிறப்பாக வழிகாட்டுகிறது. கருஞ்சீரகத்தைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. நுரையீரலில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்குகின்றன.

குளிர் காலத்தில் தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் அதிகமாகக் காணப்படும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலை வேளையிலும் இரவு தூங்கும் நேரத்திலும் கருஞ்சீரக எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கருஞ்சீரக எண்ணெய்யை நெற்றி, தலை, மூக்கு, நெஞ்சு போன்ற பகுதிகளில் பூசிக் கொள்வதன் மூலம் இந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.

தகவல் உதவி: மேலே கொடுக்கப்பட்ட தகவல் சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் முத்துக்குமார் வழங்கியுள்ளார். அவரை தொடர்பு கொள்ள 9344186480 என்ற எண்ணை பயன்படுத்தவும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment