scorecardresearch

பச்சை அல்லது கருப்பு கிரேப்ஸ்:  எதை சாப்பிடலாம்? எது சிறந்தது? 

சிறிது இனிப்பு குறைவாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பச்சை கிரேப்ஸ் எடுத்துக்கொள்வது சரியான தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிரேப்ஸ்
கிரேப்ஸ்

எப்போதும் நாம் பச்சை அல்லது கருப்பு கிரேப்சில் எதை தேர்வு செய்வது என்ற குழம்புவோம். இந்நிலையில் இரண்டு கிரேப்சில் இருக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கன்கோர்டு கிராப் என்று கருப்பு கிரேப்ஸை அழைப்பார்கள். இவை கிட்டதட்ட கருப்பு நிறம் அல்லது பர்ப்பில் நிறத்தில் இருக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், ரஸ்வரட்டோல்  (resveratrol(இதில் இருக்கிறது. இந்த ரஸ்வரட்டோல் விக்கத்தை குறைக்கிறது. இது புற்றுநோய்யை கூட தடுக்கும் ஆற்றல் கொண்டது.

 ரஸ்வரட்டோல், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி, கே இருக்கிறது. கலோரிகளும் இதில் குறைவே என்பதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கிரேப்ஸை தேர்வு செய்யலாம்.

பச்சை கிரேப்சில் வைட்டமின் கே, வைட்டமின் சி இருக்கிறது. மேலும் பொட்டஷியம், நார்சத்து இருக்கிறது. இதிலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. ( flavonoids) இந்த பிளாபாய்ட்ஸ் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இதிலும் புற்றுநோய்யை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. கருப்பு கிரேப்ஸைவிட இதில் இனிப்பு சிறிது குறைவு.  இதுவும் குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இதில் கடிச்சின் ( catechin) என்ற பொருள், இதய நோய் வராமல் தடுக்கிறது.

இந்நிலையில் சிறிது இனிப்பு குறைவாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பச்சை கிரேப்ஸ் எடுத்துக்கொள்வது சரியான தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Black or green how to best grapes