scorecardresearch

இந்த உணவு டைப் 2 வகை சர்க்கரையை கட்டுப்படுத்தும்: சத்து நிறைந்த ரெசிபி இதோ!

கருப்பு கவுனி அரிசியில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

black rice dosa
black rice dosa

கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து உள்ளது. குறிப்பாக இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. கருப்பு கவுனி கொண்டு பல்வேறு ரெசிபிகள் செய்யலாம். இட்லி, தோசை எளிதாக செய்யலாம். இந்தநிலையில் இங்கு கருப்பு கவுனி அரிசியில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருப்பு அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கருப்பு கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவிடவும். நன்றாக ஊறியதும் அரிசி அளவிற்கு ஏற்ப கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து, தேவையான உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க விடவும். அவ்வளவு தான், இப்போது அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம். தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி தோசை ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Black rice dosa recipe making in tamil 620717l